பதுளை – மாணிக்கவள்ளி தோட்டத்தைச் சேர்ந்த 42 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையான, கணேசன் கலைச்செல்வன் காணாமல் போயிருப்பதாக, அவரது மனைவி பதுளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கட்டார் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நபர் பல மாதங்களாகியும், இதுவரை வீடு வரவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பணியகமும் கணேசன் கலைச்செல்வன் இலங்கைக்கு பல மாதங்களுக்கு முன்பே, திரும்பிவிட்டார்.
அவர் இலங்கையில் எங்கு இருக்கின்றார் என்பது தமக்கு தெரியாதென்றும் கூறியதாக, அவரது மனைவி குறிப்பிடுகிறார்.
#SrilankaNews
Leave a comment