” எதிர்வரும் 04 ஆம் திகதி உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியானது, இந்நாட்டில் தீர்க்கமான அரசியல் சக்தியாக மாறும்.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், ‘மஹிந்த சூறாவளி’ எனும் வேலைத்திட்டத்தின்கீழ் நாமே அவரை நாமே மீண்டும் களத்துக்கு கொண்டுவந்தோம். அதன் தொடர்ச்சியாகவே கடந்த தேர்தல்களில் மொட்டு கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்தது. ஆனால் மக்களுக்கு வழங்கிய ஆணை மீறப்பட்டது.
அன்று மஹிந்த சூறாவளியை உருவாக்கிய சக்திகள் இன்று எம் பக்கம் உள்ளன. எனவே, மலரவுள்ள கூட்டணி தீர்க்கமான அரசியல் சக்தியாக இருக்கும்.” – எனவும் வாசு குறிப்பிட்டார்.
#SriLankaNews

