புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இளைஞனை திருத்தி தருமாறு கெஞ்சிய தாய்!

kai

arrests

தாவடி தெற்கு பகுதியில் யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரின் தாயார் இவரை திருத்தி தருமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

28 வயதான இளைஞன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளுடன் நீண்டகாலமாக தொடர்பை பேணி வந்துள்ளதோடு இதனை பிரதான தொழிலாக கொண்டு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version