தொல்லியல் அகழ்வுகள் இடம்பெற்று விகாரை அமைக்கப்பட்டு வரும் முல்லைத்தீவு குமுலமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் நேற்றிரவு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சிபி ரத்னாயக்க மற்றும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் 40க்கும் மேற்பட்ட பௌத்த பிக்கு உடன் இணைந்து திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதற்கு முன்னதாக சுதந்திர தின நாளான கடந்த 4ஆம் திகதி தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் குழு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
கிளிநொச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் குருந்தூர் மலைக்கு செல்வோம் என சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சிவாஜிலிங்கம் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாணக்கியன் உள்ளிட்டோர் மக்களின் வாழ்வியல் உரிமை மறுக்கப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு விஜயம் செய்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.
மறு நாளான நேற்று அமைச்சர்களின் திடீர் விஜயம் இடம்பெற்றுள்ளது.
மணலாறு , அரிசிமலைப் பகுதிகளை சேர்ந்த பௌத்த பிக்குகள் 40 பேருக்கு மேற்பட்டவர்கள் இணைந்து அமைச்சரோடு குருந்தூர் மலையில் நேற்று இரவு 7 மணி தொடக்கம் நள்ளிரவு வரை பிரித்ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு உள்ளனர் .
#SrilankaNews