ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சிலாபம் நகரப் பகுதிக்கு இன்று பகல் வந்த குழுவினரை ஜனாதிபதி மற்றும் அரசைப் பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினர் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
எனினும், சம்பவ இடத்தில் உடனே குவிக்கப்பட்ட பொலிஸார், அங்கு திரண்டிருந்தவர்களைக் கலைத்தனர்.
சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews