பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலகவேண்டும்! – சாணக்கியன் ‘ருவிட்’

பிரசன்ன ரணதுங்க

புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இதற்குக் கண்டனம் வெளியிட்டு தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவிலேயே இரா.சாணக்கியன் எம்.பி. மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க பதவியேற்று 48 மணித்தியாலங்களில் ஒரு உயிர் பலி எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று பிரசன்ன ரணதுங்க, உடன் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version