நாட்டில் தற்போது அதிகளவான மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதைக் கருத்தில்கொண்டு, வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமில்லை என்ற தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வழிமுறைகளுக்கு அமைய, முன்பு அறிவிக்கப்பட்டதைப் போன்று வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews

