யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்தவரை பொலிஸார் மேல் வெடி வைத்து கைதுசெய்துள்ளனர்.
கோண்டாவில் செபஸ்ரியன் வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் இளைஞனொருவன் மதுபோதையில் வந்து வீட்டிலுள்ளோர் மீது தாக்குதல் நடத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அயலிலுள்ளவர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் இளைஞனை கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞன் வீட்டிலிருந்த வாள் ஒன்றால் பொலிஸாரை தாக்க முயற்சித்ததுள்ளார் .
இதனால் பொலிஸார் வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து இளைஞனை பிடித்துள்ளனர். அவரிடமிருந்து வாளும் மீட்கப்பட்டுள்ளது .
கைதுசெய்யப்பட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
Leave a comment