ரிக் ரொக் எடுக்க முயற்சித்தவர் மோட்டார் சைக்கிளுடன் கடலில்!!

image f998d97727

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞர் ஒருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார்.

இரண்டு நண்பர்கள் இணைந்து மோட்டார் சைக்கிளில் ‘ரிக் ரொக்’ எடுக்க முனைந்த போது மோட்டார் வண்டியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர்.

அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை உயிருடன் மீட்டெடுத்ததுடன், மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்தனர்.

#SriLankaNews

Exit mobile version