ஹட்டன், பலாங்கொடை பிரதான வீதியின் பொகவந்தலாவை கெம்பியன் பகுதியில் சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை பகுதியிலிருந்த வந்த லொறி பாதையை விட்டு விலகி , கெம்பியன் பாடசாலை வளாகத்தில் வீழ்ந்துள்ளது.
இன்று மதியம் இடம்பெற்ற இவ்விபத்தில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என்றபோதிலும், பாடசாலை பெயர் பலகை சேதமாகியுள்ளது.
விபத்தில் காயமுற்ற லொறி சாரதியும் லொறியில் பயணித்த மற்றொறுவரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் லொறி கடும் சேதமாகியுள்ளது
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews