அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியலுக்காக மக்களை பொய்க்காரர் ஆக்காதீர்!!

images 1 2
Share

அரசியலுக்காக மக்களை பொய்க்காரர் ஆக்காதீர்!!

தையிட்டி விகாரைக்கு அருகில் உள்ள காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து விடுவித்து தம்மிடம் தர கோரி 2021ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனிடம் ஒப்படைத்த கடிதம் போலியானது அல்ல என கடிதம் எழுதி கையெழுத்து வைத்தவர்களில் ஒருவரான பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனிடம் தமது காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தையிட்டி விகாரையை சூழவுள்ள காணி உரிமையாளர்கள் கடிதம் மூலம் கோரி இருந்தனர்.
அந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்ததுடன் , கடிதம் கொடுத்தவர்களில் ஒருவரான பத்மநாதன் என்பவரும் ஊடகங்களுக்கு கடிதம் கொடுத்தமை தொடர்பில் கருத்து தெரிவித்து இருந்தார்
இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 2019 ஆம் ஆண்டு திகதியிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு எழுதப்பட்ட கடிதம் என ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அந்த கடிதம் எழுதப்பட்ட கால பகுதியில் கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினரே இல்லை. ஒருவரின் தொலைபேசி இலக்கம் 11 இலக்கங்களை கொண்டுள்ளது. இருவரின் கையெழுத்து ஒரே மாதிரி இருக்கு என்று கூறி இந்த கடிதம் போலியானது என குறிப்பிட்டு , அந்த கடிதத்துடன் , கஜேந்திரனுக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்து , அந்த கடிதம் போன்றே இந்த கடிதமும் போலி என நிறுவ முயசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவித்த ஆ. பத்தமநாதனை ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் சந்தித்து கருத்து கேட்ட போது ,
தாங்கள் கடிதம் கொடுத்தது உண்மை எனவும் , விரும்பின் அந்த கடிதத்தின் கீழ் உள்ள ஏனையவர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு கடிதம் கொடுத்தன் உண்மை தன்மையை விளங்கி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
தங்களின் அரசியலுக்காக எம்மை பொய்க்காரர் ஆக்குவது எமக்கு மிகுந்த மன வேதனையை ஈடுபடுத்தியுள்ளதாக மேலும் கவலையுடன் தெரிவித்தார்.
#srilankaNews
Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...