முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் தலைக்கீழாக புரண்ட நிலையில் பாரிய கப்பல் ஒன்று கரை ஒதுக்கியுள்ளது.
இன்று அதிகாலை தொழிலுக்காகச் சென்ற மீனவர்களால் குறித்த கப்பல் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களால் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற கடற்படையினர் கப்பலை பார்வையிட்டுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாக காணப்படும் குறித்த கப்பல் செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கடலில் தலைகீழாக புரண்ட நிலையில் கரை ஒதுக்கியுள்ளது.
கரையொதுங்கியுள்ள கப்பலை பெருமளவான மக்களும் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த கப்பல் எங்கிருந்து வந்துள்ளது?, யாருடையது, எவ்வாறு விபத்துக்குள்ளாக்கியது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
#SriLankaNews