download 11 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காணி சுவீகரிப்பு நடவடிக்கை மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

Share

ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.

தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக அமைக்க காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றுஅப்பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாரந்தனை வடக்கு ஜே/56  தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் அமைக்கப்ட்டுள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணி சுவீகரிக்கும் நோக்கில் குறித்த இரகசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதும் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.

இதன்போது போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த கடற்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படமெடுத்ததை அவதானிக்க முடிந்தது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...