காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.
காணாமல் போனோர் விவகாரத்துக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்பே ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும், காணாமல் போனோரின் உறவுகளுடனான சந்திப்புக்கு விரைவில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்படி, கடந்த சில மாதஙகளுக்கு முன்னர் குறித்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக குறித்த சந்திப்பு தொடர்பான திகதி தீர்மானிக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற அமைச்சருடனான சந்திப்பின்போது, காணாமல் போனோரின் உறவினர்களுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், தமது உறவுகள் காணாமல் போன நிலையில், அவர்களது உறவுகள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் தேர்வுகளை முன்வைப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews