sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச அரசுக்குச் சர்வதேசம் உதவாது! – அடித்துக் கூறுகின்றார் சஜித்

Share

“நாட்டை எப்படி ஆள்வது எனத் தற்போதைய ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கொரோனாவைக் காரணம் காட்டுகின்றனர்.”  – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நெருக்கடியான காலகட்டத்தில்கூட கொள்ளையடிப்புகள் நிறுத்தப்படவில்லை. வெள்ளைப்பூடு முதல் சீனி வரை அனைத்து விடயங்களிலும் மோசடிகள் அரங்கேறியுள்ளன. எனினும், கொரோனாவைக் காட்டி அனுதாபம் திரட்டுவதற்கு ஆளுங்கட்சியினர் முற்படுகின்றனர். தமது இயலாமையை மூடிமறைக்கப் பலதும் செய்கின்றனர்.

ஆனால், தமக்கு முடியாது என்பதை ஆட்சியாளர்கள் ஏற்கனவே நிரூபித்துவிட்டனர். சர்வதேசத்தை நாடமுடியாது. நாடினால் உதவியும் கிடையாது.

எனவே, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும். அதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். சம்பளம் உட்பட எந்தவொரு வரப்பிரதாசங்களையும் வாங்காமல் சிறந்த வழிகாட்டலை வழங்குவேன்” – என்றார்.

#SriLanakNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...