download 11 1 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அச்சுவேலியில் விசேட தேவையுடைய பெண்ணுக்கு நடந்த சம்பவம்!

Share
அச்சுவேலி வளலாயில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக தெரிவித்து தனிமையில் இருந்த விசேட தேவையுடைய தையல் தைக்கும் பெண்ணிடம் இனந்தெரியாத ஒருவரால் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவர் கோப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவிலிருந்து வருகை தந்துள்ளதாக தெரிவித்து தையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த பெண்ணிடம் அடுத்துவரும் மாதங்களில் அரசாங்கம் ஐயாயிரம் ரூபாய் சமுர்த்தி கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே அதற்காக தாம் ஒவ்வொரு சமுர்த்தி பயனாளிகளிடமிருந்தும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை அளவிடுகிறோம். என தெரிவித்து நான்கு படிவங்களைக் கொடுத்து அதில் கையொப்பமிட்டு வழங்குமாறு கூறி அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.
தன்னிடம் தற்போது அவ்வளவு தொகை பணம் இல்லை அயலிலுள்ளவர்களிடம் பெற்றுத்தான் வழங்க வேண்டும் என வயதான பெண் தெரிவித்த போதிலும் பணம் உடனடியாக வழங்காவிட்டால் எதிர்வரும் மாதங்களில் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்து வலுக்கட்டாயமாக குறித்த பணத்தினை பெற்றுள்ளார்.
பணத்தினை பறி கொடுத்த பெண் தனிமையில் இருந்த நிலையிலே வந்திருப்பவர் முகக்கவசத்தினை அணிந்தவாறு உடனடியாக பணத்தை வழங்க வேண்டும் என்று கடுந்தொனியில் தெரிவித்ததால் தனக்கு இது மோசடி என சந்தேகம் ஏற்பட்ட போதிலும் பணத்தை வழங்காவிட்டால் தனது உயிருக்கு ஏதேனும் விபரீதம் நிகழலாம் என்ற அச்சத்தினால் பணத்தை வழங்கிவிட்டு தொலைபேசி ஊடாக அயலவர்களுக்கு தெரிவிக்கலாம் என முயற்சித்த போது தனது சிமாட் கையடக்க தொலைபேசி ஒன்றும் அங்கிருந்து களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொலைபேசி களவாடப்பட்டமை தொடர்பாகவும் டயலொக் தொலைபேசி நிறுவனத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை கடந்த வாரம் நீர்வேலி பகுதியிலும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவாகியுள்ளது. இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பிரதேச செயலகத்திலிருந்து பதிவினை மேற்கொள்ள வருவதாக தெரிவித்து பல பண மோசடிகள் இடம் பெற்றுள்ளன. எனவே இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களை மிக அவதானமாக இருக்குமாறு பிரதேச செயலர் மற்றும் கிராம சேவையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
#srilanakaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...