மனைவியை எரித்த கணவன்! – முல்லைத்தீவில் சம்பவம்

மனைவியை எரித்த கணவன்d

முல்லைத்தீவில் மனைவியை டீசல் ஊற்றி கணவர் எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

கணவணுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கணவன் கோபமடைந்து டீசல் ஊற்றி எரித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த மனைவி கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கணவரை (வயது–28) மல்லாவிப் பொலிஸார் கைது செய்துள்ளது.

அத்துடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version