மல்வானை காணியும் வீடும் பஸிலுடையதே! – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவிப்பு

76029f91 439d3e2f f1636930 basil rajapaksa 850x460 acf cropped 850x460 acf cropped

மல்வானையில் உள்ள காணியும் வீடும் தனது அல்ல என்று கம்பஹா உயர் நீதிமன்றத்தில் பஸில் ராஜபக்‌ச தெரிவித்திருந்த போதிலும் அது பசிலுக்கு சொந்தமானது என்று பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் படையின் சட்டத்தரணிகள் ஞாயிற்றுக்கிழமை (22) நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சட்டத்தரணி அகலங்க உக்வத்த மேலும் கூறியதாவது,

மல்வானையில் உள்ள வீடு கடந்த 10 ஆம் நாள் பிற்பகல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த காணி பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது என்று தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.

பொலிஸாரின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் நீதவான் அதிருப்தி வெளியிட்டதாக மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version