புதுக்குடியிருப்பில் சிறுமி பலரால் வன்புணர்வு!

child sexual abuse

A little girl poses for photographs to illustrate the topic of child abuse in Canberra, Monday, Oct. 28, 2013. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் உள்ள வாடகை வீடு மற்றும் பிறிதொரு இடத்தில் வைத்து, இரு வெவ்வேறு நபர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 25ஆம் திகதியன்று கிளிநொச்சியில் உள்ள நண்பனை பார்ப்பதற்காக முள்ளியவளை
மாஞ்சோலை பகுதியில் இருந்து முல்லைத்தீவுக்கு சென்ற குறித்த சிறுமி முல்லைத்தீவில் இருந்து
புதுக்குடியிருப்புக்கு முகமறியாதவர்களின் வாகனத்தில் பயணித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி செல்வதாக தெரிவித்த இளைஞன் ஒருவரின் உந்துருளியில் பயணம் செய்தவேளை, அப்பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, இளைஞனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி வீதியில் விடப்பட்ட போது, மற்றுமொருவர் சிறுமியியை ஏற்றிச்சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வீதியில் கொண்டுவந்து விட்டுள்ளார்.

இரவு முழுவதும் வீதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்ற சிறுமி, சனிக்கிழமை காலை கிளிநொச்சி சென்று, பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நிலையில் கிளிநொச்சி பொலிஸாரால் சிறுமி மீட்கப்பட்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 36வயதான குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு இளைஞனை தேடிவருவதாகத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பொலிஸார், மேதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version