யாழில் அலைபேசிகளை திருடிய கும்பல் கைது!

Screenshot 20220730 085947 2Accounts

யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களாக அலைபேசிகளை திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான 43 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

நாவற்குழி மற்றும் அரியாலையைச் சேர்ந்த 23, 24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 3 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐபோன் உள்பட 45 அலைபேசிகள் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருளுக்கு அடிமையாகியதால் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் அலைபேசியைத் திருடி தப்பிப்பதாக சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இடம்பெற்ற அலைபேசித் திருட்டுகளிலும் இவர்களுக்கு தொடர்புண்டு என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அலைபேசி திருட்டு போயிருந்தால் உரியவர்கள் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் வந்து அடையாளம் காட்ட முடியும் எனறும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

#SriLankaNews

Exit mobile version