“மொட்டு கட்சியின் தாய்வீடுகூட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிதான். எனவே, அக் கட்சியை அழிக்க முடியாது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
” தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் சிலருக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று சிறிய கட்சியாக தெரியலாம். இதுதான் தாய்க்கட்சி என்பதை மறந்துவிட்டே அவர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
மாகாண மற்றும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களின்போது நாம் பலத்தை காட்ட வேண்டும். மாறாக அரசு கவனிப்பதில்லையென கவலையடைந்துகொண்டிருப்பதில் பயன் இல்லை.” – எனவும் குறிப்பிட்டார் துமிந்த திஸாநாயக்க.
#SriLankaNews