நாட்டில் ஏற்பட்டுள்ள அதீத விலையேற்றம், பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக யாழின் பிரதான விகாரையில் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள ஜம்புகோளபட்டின சங்கமித்தா விகாரையில் உண்டியல் திருட்டு இடம்பெற்றுள்ளதாக கடற்படை அதிகாரிகளால் இன்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது இளவாலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மாதகல் மேற்கு பகுதியில் உள்ள விகாரையில் அமைக்கப்பட்டிருந்த உண்டியலே இவ்வாறு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மாதகல் பகுதி கடற்படை அதிகாரிகளால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த உண்டியல் திருட்டில் சுமார் 15000ரூபாய் வரை கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews