எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீடு வழக்கை தள்ளுபடி செய்யும் கோரிக்கை நிராகரிப்பு
எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீடு வழக்கை தள்ளுபடி செய்யும் கோரிக்கை நிராகரிப்புஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோரி அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்புறுதிப் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க லண்டன் நீதிமன்றம் வரையறைகளை விதித்துள்ளதால், வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கப்பலின் காப்புறுதி நிறுவனத்தின் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் ஆட்சேபனை தெரிவிக்க காப்புறுதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
இதற்கு சிங்கப்பூர் வர்த்தக மேல் நீதிமன்றம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை காப்புறுதி நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.