” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும்.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
அத்துடன், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.
அதேவேளை, அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் இன்று சபையில் அறிவித்தார்.
#SriLankaNews