ஈஸ்டர் தாக்குதல் அரசியல் சதியே! – நினைவேந்தலில் பேராயர் சுட்டிக்காட்டு

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு அப்பால் அரசியல் சதி இருக்கின்றது எனப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று நாட்டின் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இடம்பெற்றன.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அறிவுறுத்தலின் பேரில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் பிரதான நிகழ்வு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. சர்வமதத் தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பேசிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பிண்ணனியில் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு அப்பால் அரசியல் சதி இருக்கின்றது. அதன் காரணமாகவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் அரசும் சட்டமா அதிபர் திணைக்களமும் பின்வாங்குகின்றன” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version