காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்து சென்ற விபத்தினை ஏற்படுத்திய வேனின் சாரதி குறித்த நபரை இடைவெளியில் இறக்கிவிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பதுளை-கொழும்பு வீதியின் ஹாலிஎல பகுதியில் நேற்று (13) மாலை 4.30 மணியளவில் வீதியை கடக்கும்போது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிப்பதாக கூறி அழைத்து சென்ற விபத்தின் சாரதி பாதிக்கப்பட்ட நபரிடம் 200 ரூபாவை கொடுத்துவிட்டு பாதி வழியில் இறக்கிவிட்டுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து வேனின் சாரதி கரந்தகொல்ல வீதித் தடுப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
#SrilankaNews
.
Leave a comment