tamilni 405 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் மா அதிபர் புதிய தீர்மானம்!

Share

பொலிஸ் மா அதிபர் புதிய தீர்மானம்!

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன,நேற்று (25) முதல் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்காவது முறையாக அவருக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு நிறைவடைந்ததை கவனத்தில் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்த சில நாட்களில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

சி.டி.விக்கிரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி, அவருக்கு 3 மாத கால சேவை நீடிப்பு வழங்கியதுடன், அந்த காலம் முடிவடைந்த பின்னர், ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கு மேலும் 3 மாத சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது.

மூன்றாவது முறையாக மேலும் 3 வார சேவை நீடிப்பு ஒக்டோபர் 13 ஆம் திகதி வழங்கப்பட்டது, சி.டி. விக்கிரமரத்னவுக்கு நான்காவது சேவை நீடிப்பு வழங்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் நேற்றுமுன்தினம் (24ஆம் திகதி) வரை நடைமுறையில் இருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் தான் பதவியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...