மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மாணவன் நேற்று (09) பிற்பகல் தனது நண்பருடன் நீராடுவதற்காக பொல்கொல்ல நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றிற்கு சென்றுள்ளார்.
இதன்போது குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#srilankaNews
Leave a comment