நெருக்கடி நிலை விரைவில் நீங்கும்! – மஹிந்த நம்பிக்கை

mahinda 1

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைகள் விரைவில் நீங்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்க்கும் வேலைத்திட்டத்துக்குத் தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவைப் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கான தேசிய நிலையத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் எடுத்த தீர்மானங்களாலேயே தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என இதன்போது தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே தற்போது அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது எனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

நெருக்கடியை உருவாக்குவதற்குப் பங்களித்தவர்கள் நிரபராதிகளாகி தற்போதைய அரசின் மீது சகல பழிகளையும் சுமத்துகின்றனர் என்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதன்போது பிரதமரிடம் சுட்டிக்காட்டினர் எனவும் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version