விக்கிரகங்களை அதே இடத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

images 1 13

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளை பொலிஸார் எடுத்துச்சென்றுள்ள விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், காவல் நிலையத்தில் உள்ள அனைத்து திருவுருவச்சிலைகளும் பூசாரியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அங்கு பூசை வழிபாடுகள் அனைத்தும் செய்ய முடியும் எனவும் தொல்பொருள் உத்தியோகத்தர்கள் எந்த தடங்கலும் செய்ய முடியாது எனவும் உத்தரவிட்டது என்றார்.

மேலும்  இன்று வியாழக்கிழமை அனைத்து திருவுருவச் சிலைகளும் அங்கு பிரதிஸ்டை செய்து பூசை வழிபாடுகள் அனைத்தும் நடைபெறும் என்றார்.

#srilankaNews

Exit mobile version