மூதூர் – இறால்குழி பாலத்துக்கு அருகில் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மீன்பிடிப்பதற்காகக் கடந்த திங்கட்கிழமை மாலை கடலுக்குச் சென்ற இளைஞரே நேற்றுப் புதன்கிழமை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment