மீண்டும் கூடுகிறது ஆணைக்குழு!

election commission 10.12.2021

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு அடுத்த வாரம் மீண்டும் கூடவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி இன்று (28) ஆரம்பமாகவுள்ளதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படாது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, இது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் சில தினங்களில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version