கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து குழந்தை உயிாிழப்பு!

download 10 1 6

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து குழந்தை உயிாிழப்பு!

இரண்டரை வயது குழந்தையொன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று யாழ்.இளவாலை வசந்தபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது.
நேற்று(09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில் தாயார் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குழந்தை தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள குழந்தையின் சடலம், உறவினர்களிடம் இன்று(10) கையளிக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
#srilankaNews
Exit mobile version