24 661ea54586cfd
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவருக்கு அதிக விலைக்கு கொத்து ரொட்டி விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது

Share

வெளிநாட்டவருக்கு அதிக விலைக்கு கொத்து ரொட்டி விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது

கொழும்பு – புதுக்கடை பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை கடும் தொனியில் மிரட்டிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவு விற்பனை நிலையமொன்றின் காசாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உணவகத்தில், உணவுப் பெற்றுக் கொள்ளச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கொத்து ரொட்டியின் விலையைக் கேட்டபோது, அந்த உணவகத்தைச் சேர்ந்தவர் 1,900 ரூபாய் என அறிவித்துள்ளார்.

விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர் வெளிப்படையாகவே தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில், உணவு விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர் சுற்றுலாப் பயணியை மிரட்டும் தொனியில் எச்சரித்திருந்தார்.

இவை, அனைத்தும் குறித்த சுற்றுலாப் பயணியால் காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று உணவகத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...