தனது காதலியை, காதலன் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த பயங்கர சம்பவமொன்று மெதிரிகிரிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
22 வயதான யுவதியொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த குறித்த யுவதி அப்பகுதியில் உள்ள வீடொன்றில் காதலனுடன் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னரே யுவதியை காதலன் வெட்டி கொலை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
#SriLankaNews