கிணற்றில் விழுந்து 7 வயது சிறுவன் பரிதாப மரணம்!

கிணற்றில் விழுந்து 7 வயது சிறுவன் பரிதாப மரணம்

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரிப் பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது பாதுகாப்பற்ற நிலையிலிருந்த கிணற்றில் விழுந்து சிறுவன் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில், சிறுவன் தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.

#SriLankaNews

Exit mobile version