படகின் சுக்கான் உடைந்த நிலையில் கடலில் பயணிகள் அந்தரிப்பு!

WhatsApp Image 2023 05 23 at 12.53.20 1024x766 1
படகின் சுக்கான் உடைந்த நிலையில் கடலில் பயணிகள் அந்தரிப்பு!
நெடுந்தீவிலில் இருந்து குறிகாட்டுவான் வந்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்த நிலையில் பயணிகள் கடலில் அந்தரித்த நிலையில் மீனவர்களின் உதவியுடன் கரைக்கு சேர்ந்தது.
நேற்று காலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிப் பயணித்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்தமையால் நெடுந்தீவுக்கான போக்குவரத்துத் தடைப்பட்டது.
சுமார் 70 பயணிகளுடன் பயணித்த சமுத்திரதேவா, மலையடிப் பகுதியை அண்மித்தபோது அதன் சுக்கான் உடைந்துள்ளது. அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்களின் உதவியுடன், படகு நடத்துனர்கள் சாதுரியமாகச் செயற்பட்டு பயணிகளைப் பாதுகாப்பாக குறிகாட்டுவான் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.
இதன்காரணமாக பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
#srilankaNews
Exit mobile version