IMG 20221022 153900
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுமியின் சங்கிலியை அறுத்த இராணுவச் சிப்பாய்மடக்கிப் பிடிப்பு!

Share

வலி.வடக்கு பலாலி வள்ளுவர் புரத்தில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று வந்த சிறுமியின் சைங்கிலியை அபகரித்த இராணுவச் சிப்பாய் ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (22) மதியம் இடம்பெற்றது. வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவச் சிப்பாய் சங்கிலியை அபகரித்து விட்டு மாணவியையும் கீழே தள்ளி விட்டுச் சென்றுள்ளார்.

காயமடைந்த சிறுமி தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் சங்கிலியை அபகரித்த இராணுவச்சிப்பாய் ஊர் மக்களினால் பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில், பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...