‘கோட்டா கோ கம’வைக் கைப்பற்றியது இராணுவம்! போராட்டக்காரர்கள் வெளியேற்றம் – 8 பேர் கைது!!

294424746 422556529894086 4249764497528075277 n

கொழும்பு காலிமுகத் திடல் “கோட்டா கோ கம’வில் நள்ளிரவு பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு, அப்பகுதியை படையினர் முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர்.

நள்ளிரவைத் தாண்டியதும் அதிகாலை 1.00 மணியளவில் படை நடவடிக்கை ஆரம்பமானது. இதற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும், அவர்கள் பலவந்தமாக விரட்டப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

படை நடவடிக்கையின்போது ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பி.பி.சி. செய்தியாளரும் தாக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் காலிமுகத் திடல் பகுதிக்கு செல்லமுடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளர். 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறவழியில் போராடிய தங்களை படையினர் கடுமையாக தாக்கினர், இது அரச பயங்கரவாதம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version