அரசியலமைப்பின் 22 வது திருத்தச்சட்டம் 178 மேலதிக வாக்குகளால் இன்று (21) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
22 வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக 178 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் கிடைக்கப் பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர மாத்திரமே எதிராக வாக்களித்தார். இதன்படி 20வது திருத்தச்சட்டம் 178 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப் படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
#SrilankaNews