அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு
” 19 பிளஸ் என்பதே 21 ஆவது திருத்தச்சட்டமூலமாக வருகின்றது என ஆளுங்கட்சி கூறியது. ஆனால் 19 மைனஸ்தான் முன்வைக்கப்பட்டுள்ளது. 19 இல் இருந்த முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை.
அமைச்சரவை அனுமதி வழங்காத, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் எதற்காக கட்சிகளுக்கு வழங்கப்படுகின்றது. இது காலத்தை இழுத்தடிக்கும் செயலாகும். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நிறைவடையும்வரையே, இந்த நாடகம் நீடிக்கும். அதன்பின்னர் 21 ஐ கைவிட்டுவிடுவார்கள்.” என்றார் கிரியல்ல.
#SriLankaNews

