3 49
இலங்கைசெய்திகள்

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக யாழ் வீராங்கனை

Share

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக யாழ் வீராங்கனை

இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளராக செயற்பட தயாராக இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி (Tharjini Sivalingam) தெரிவித்துள்ளார்.

 

இதற்காக தம்மிடம் ஏற்கனவே உள்ள நிலை 01 சான்றிதழுக்கு அப்பால், விரைவில் நிலை 02 மற்றும் நிலை 03 பயிற்சி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

நான்கு வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண மற்றும் ஐந்து ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய தர்ஜினி, 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த கேப் டவுன் உலகக் கிண்ணத்துக்கு பிறகு தேசிய அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

 

அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் தர்ஜினி தனது இந்திய கணவர் ஆர்.பிரசாத்துடன் பெங்களூரில் நடந்த 13ஆவது ஆசிய நிலை வலைப்பந்தாட்டப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் பார்வையாளராக பங்கேற்றார்.

 

இந்தநிலையில், இறுதிப் போட்டியில் வெற்றி, இலங்கை அணியிலிருந்து நழுவியது துரதிர்ஸ்டவசமானது, இந்த பின்னடைவுக்கு அணி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இலங்கை அணிக்கு உள்நாட்டு அளவில் போதுமான அனுபவம் இருந்த போதிலும், வெளிநாட்டுக்களங்களில் வீராங்கனைகளுக்கு உரிய அனுபவம் இல்லை என்றும் தர்ஜினி குறிப்பிட்டுள்ளார்.

 

இருப்பினும், அவர்கள் முன்கூட்டியே போதுமான சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால், அந்த அணிக்கு சர்வதேச அனுபவமும் உள்ளது என்று தர்ஜினி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...

world 190
செய்திகள்உலகம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து: பெட்ரோல் விநியோகம் பாதிக்கும் என எச்சரிக்கை!

உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில்...