வங்கக்கடலில் தாழமுக்கம்!!

Weather

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்திற்கு மேலாக தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதுடன், நாளை மறுதினம் மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலைகொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்கு கடற்றொழிலாளர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version