நாடாளுமன்ற வளாகத்தில் போரட்டத்தை மேற்கொண்டுவரும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தற்போது தொடர்ச்சியாகக் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சையும், நீர்த்தாரைப் பிரயோகத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஏக காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களை அப்புறப்படுத்தும் நோக்கில் பொலிஸார் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாடாளுமன்ற வளாக பிரதேசத்தில் தற்போது அல்லோலகல்லோல நிலையும் பதற்றமும் ஏற்பட்டிருக்கின்றது.
#SriLankaNews
Leave a comment