கொழும்பு, காலிமுகத்திடலில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிர்நீத்த போராட்டக்காரர்களை நினைவு கூர்வதற்காக, காலிமுகத்திடல் ஒன்று கூடிய போதே பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த தாயையும் அவருடைய பிள்ளையையும் போராட்டம் நடத்தும் இடத்திலிருந்து பொலிஸார் இழுத்துச் சென்றனர். இதனால், அவ்விடத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
மார்ச் 31ஆம் திகதி முதல் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகுமாறு கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மக்கள் போராட்டத்தில் பலர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews