கொழும்பில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பதற்றம்..!
கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை சீர்குலைக்க ஒரு குழு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் பொரளை சுற்றுவட்டத்தில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு சில தரப்பினர் இடையூறு விளைவித்து வருகின்றனர்.
இதனை அடுத்து அங்கு கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
#srilankaNews
Leave a comment