ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஒன்றாக எழுவோம்’ தொடரின் இரண்டாவது நிகழ்வு இன்று (16) நாவலப்பிட்டியில் ஆரம்பமானது.
இம்மாநாட்டில் கலந்துகொள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாவலபிட்டிக்கு வந்திருந்த நிலையில், மஹிந்தவுக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதனால் அங்குப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், அதிகளவானப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 10 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#SriLankaNews