கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார்.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த நிலையில் கொழும்பில் பிளவர் வீதியிலும், காலிமுகத்திடல் பகுதியிலும் உலங்குவானூர்திகள் வட்டமிட்டு வருகின்றன.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆயுதம் ஏந்திய படையினர் குறித்த பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews