கோட்டை ரயில் நிலையத்தில் இன்றிரவு பதற்றம்!

கோட்டை ரயில் நிலையத்தில் இன்றிரவு பதற்றம் e1651777112965

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்றிரவு பதற்ற நிலை ஏற்பட்டது.

கொழும்பு – கோட்டையிலிருந்து இரம்புக்கனை மற்றும் பொல்காவலை நோக்கிப் பயணிக்கும் இரவுநேர ரயில்களும், மருதானையிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் சேவையும் திடீரென இடைநிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். அத்துடன் அமைதியின்மையும் ஏற்பட்டது.

ரயில் சாரதிகள் இல்லாததன் காரணமாக இரவு நேர ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டன என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

#SrilLankaNews

Exit mobile version