சாரதி அனுமதிப்பத்திர பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

tamilni 161

சாரதி அனுமதிப்பத்திர பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

அனுராதபுரம் மாவட்ட அலுவலகத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணி காரணமாக அனுராதபுர அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

இதன் போது குறித்த அலுவலகத்தில் இம்மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பணிகள் இடைநிறுத்தபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் சேவைகளைப் பெறுவதற்கு நேரத்தை ஒதுக்கியவர்கள் தாங்கள் விரும்பும் நாளில் சேவைகளைப் பெற முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Exit mobile version